×

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியை உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசானை: 2021-22ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது, பத்திரிகைத் துறையில் பணியாற்றும் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழைதிருத்துவோர் பணிக்காலத்தில் இயற்கை எய்திட நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தற்போது குடும்ப உதவி நிதியாக அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப ₹3 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் குடும்ப உதவி நிதி ₹3 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் அறிவிப்பினை அறிவித்தார்.  பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்து விடுவார்களேயானால் அவர்களது குடும்பத்திற்கு ₹5 லட்சம், 15 ஆண்டுகள் என்றால் ₹3 லட்சத்து 75 ஆயிரம், 10 ஆண்டுகள் என்றால் ₹2 லட்சத்து 50 ஆயிரம், 5 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்தால் ₹1 லட்சத்து 25 ஆயிரம் என்றும் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.  குடும்ப உதவி நிதித் திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற்று செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு விண்ணப்பிக்கலாம்….

The post பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியை உயர்த்தி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்